ஜியோவை காப்பி அடிக்கும் இன்டெக்ஸ்

Last Modified : 03 Aug, 2017 08:35 am
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சமீபத்தில் 4ஜி வசதி கொண்டு ஜியோ feature போனை அறிமுகப்படுத்தியது. தற்போது இதே போலவே 4G VoLTE வசதி கொண்ட feature போனை இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. நவரத்னா ரக feature போன்களின் வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போனிற்கு Turbo+ 4G என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. KaiOS-ல் இயங்கும் Turbo+ 4G போனில் 2.4 இன்ச் தொடுதிரை, டூயல் - கோர் ப்ராசெஸ்ஸார், 521MB RAM, 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 2000mAh போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இதன் பின்பக்கத்தில் 2 MP திறனுள்ள கேமராவும், முன்பக்கத்தில் VGA கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மொபைலின் விலை 1,999 ரூபாயாகும். Turbo+ 4G-ஐ தவிர்த்து ECO ரகத்தில் ECO 102+, ECO 106+ மற்றும் ECO SELFIE ; Turbo ரகத்தில் Turbo Shine, Turbo Selfie18; Ultra ரகத்தில் Ultra Selfie மற்றும் Ultra 2400+; Lions G10 என 8 விதமான feature போன்களை இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றின் விலை முறையே 700 ரூபாயில் இருந்து 1500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close