விஸ்தாரா விமானத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு வசதி!

Last Modified : 02 Aug, 2017 03:26 pm
விஸ்தாரா ஏர்லைன் நிறுவனம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வசதியை வழங்கியுள்ளது. இதன்படி, விமானத்தில் தனியாக பயணம் செய்யும் பெண்கள், டிக்கெட் புக் செய்யும் போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு ஜன்னலோர இருக்கைகள் அல்லது நடைபாதையை ஒட்டிய இருக்கைகள் வழங்கப்படும். நடு இருக்கையில் ஆண்கள் உட்கார முடியாது. வேறு பெண்கள் புக் செய்யவில்லை என்றால், நடு இருக்கை காலியாகவே இருக்கும். மேலும், விமானப்பயணம் முடிந்ததும், அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டாக்ஸி அல்லது ஆட்டோ போன்ற சாலை போக்குவரத்து வசதிகளையும் விமான போக்குவரத்து நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சலுகையில், இதுவரை 8000 பெண்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், ஒரு நாளைக்கு 70-100 பெண்கள் இந்த விமானத்தில் பயணம் செய்கின்றனர் என ஏர்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து விஸ்தாரா விமான சேவையை பயன்படுத்திய பெண் பயணிகள் கூறுகையில், "நாங்கள் மிகவும் பாதுகாப்பாக பயணம் செய்ததாக உணர்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close