சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1111ல் பறக்கலாம்... இண்டிகோ சலுகை அறிவிப்பு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தனியார் விமான நிறுவனமான இண்டிகோ தனது 11வது ஆண்டு நிறைவைக்குறிக்கும் வகையில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, பயணிகள் கட்டணம் ரூ.1111-ல் இருந்து தொடங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ் இன்று (2ம் தேதி) முதல் 6 ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம். வருகிற 24ம் தேதியில் தொடங்கி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வரையிலான காலகட்டத்திற்குச் செய்யப்படும் டிக்கெட்களுக்கு மட்டும் இந்தச் சலுகை பொருந்தும். இந்தச் சலுகையின்படி, சென்னையில் இருந்து கோயமுத்தூர் மற்றும் பெங்களுருவுக்கு முறையே ரூ.1111ல்லும், சிங்கப்பூருக்கு ரூ.4911ல்லும் பறக்கலாம். மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.1211, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1411-க்கும், மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.1931-த்திலும் பறக்கலாம். இதுதவிர, 11 சதவிகித சூப்பர் கேஷ்பேக் சலுகையையும் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்துவிட்டால், ரத்து செய்தாலும் பணம் திரும்பப் பெற முடியாது என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இண்டிகோ நிறுவனம் மழைக்காலச் சலுகையாக, பயணக்கட்டனத்தில் தள்ளுபடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close