ஏர்டெல் பிராட்பேண்டில் அதிரடி ஆஃபர்... 1000 ஜிபி எக்ஸ்டிரா டேடா

  jvp   | Last Modified : 05 Aug, 2017 11:52 pm
ஜியோ வருகைக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களிடையே டேடாவை வாரி வழங்குவதில் மிகப்பெரிய போட்டியே வந்துவிட்டது. கிள்ளிக்கொடுத்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் எல்லாம், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள அள்ளிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 'பிக் பைட்' என்னும் பெயரில் வந்துள்ள இந்த சலுகையில், ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1599 என ஆறு பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், பிளானுக்கு ஒதுக்கப்பட்ட ஜிபி-க்கு மேல் 500 முதல் 1000 ஜிபி வரை இலவசமாகப் பெறலாம். உதாரணத்துக்கு ரூ.599 பிளான் எடுத்தால், அவர்களுக்கு 20 ஜிபி ஒதுக்கப்படும். கூடுதலாக 500 ஜிபி இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம், குறிப்பிட்ட ஜிபி காலியாகிவிட்டால், இன்டர்நெட் வேகம் குறைந்துவிடுமோ என்ற கவலை தேவையில்லை. இந்தச் சலுகை ஏர்டெல் டிஎஸ்எல் சேவைகயை ஜூன் 12-ம் தேதியிலிருந்து பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் டேட்டாவினுடைய வேலிடிட்டி மார்ச் 31, 2018 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சலுகை பற்றிய விவரம் மற்றும் ஆஃபரைப் பெறுவதற்கு www.airtel.in/broadband என்ற இணைய முகவரியில் காணலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close