வாட்ஸ் ஆப் - கைசாலா ஆப் ஸ்பெஷல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தற்போதைய நாகரீக வளர்ச்சியில் உலகம் முழுவதிலும் சுமாராக 100 கோடிக்கு மேல் வாட்ஸ் ஆப் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இணையதளம் மூலமாக வாட்ஸ் ஆப்பில் உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்ஆப்-ல் இல்லாதது; கைசாலா-வில் இருக்கு...!! * வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்பில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். * கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம். * கைசாலா ஆப் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் மற்றும் வாய்ஸ் கால் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. * தங்கள் மொபைலில் கைசாலா ஆப் வைத்திருப்போர் ஏதாவதொரு வணிக வளாகம் ஒன்றிற்குள் சென்றால் தானாகவே அந்த வணிக வளாகத்தில் இருக்கக்கூடிய கடைகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதையும் அவற்றிற்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் போன்றவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். * இதனை தற்போது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. * இதெல்லாம் வாட்சப்-ஐ காட்டிலும் கைசாலா-வில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.