400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி ஐடி நிறுவனம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
பல்வேறு காரணங்களுக்காக ஐடி நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட், தலைமை பொறுப்பில் இருக்கும் 400 பேரை வேலையை விட்டு நீக்க உள்ளது. கடந்த மே மாதம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் புதிய யுக்தியாக விருப்பு ஓய்வு முறையை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையில் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு 9 மாத ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த முறையின் அடிப்படையில் தற்போது 400 பணியாளர்கள் அந்த நிறுவனத்தை விட்டு விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 382 கோடி ரூபாய் வரை நிறுவனத்திற்கு செலவு குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 2.56 லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் பணி புரிகின்றனர். வரும் காலத்தில் இணைய பாதுகாப்பு , செயற்கை நுண்ணறிவு, தகவல் அறிவியல் போன்ற துறைகளில் கவனம் செலுத்த உள்ளதாக காக்னிசன்ட் தலைவர் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close