மோடம் இல்லாமல் இன்டர்நெட் : பிஎஸ்என்எல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தனியார் தொலைத்தொடர்பு நிறுவங்களின் நெருக்கடிகளை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மோடம் இல்லாமல் இன்டர்நெட் சேவையை பெறும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த உள்ளது. இது நாள் வரை பிஎஸ்என்எல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் தொலைபேசி மற்றும் மோடம் ஆகிய இரண்டையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. வரும் ஆகஸ்ட் இறுதிக்குள்ளாக நாட்டில் உள்ள 2.32 லட்சம் பிஎஸ்என்எல் லேண்டன்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்தப்பட உள்ளன. இன்டர்நெட் ப்ரோட்டோக்கால் வசதி கொண்ட தொலைபேசி கருவியானது இதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் வீடியோ காலிங், கான்ஃபரன்ஸிங் போன்ற பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், லேண்ட்லைன் நம்பருக்கு வரும் அழைப்புகளை மொபைல் போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிலும் பேச முடியும். இந்த சேவைகள் எல்லாம் ப்ரீ-பெய்டு சேவையுடன் வழங்கப்பட உள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close