ப்ளிப்கார்ட் சுதந்திர தின அதிரடி ஆஃபர்...!

Last Modified : 10 Aug, 2017 05:30 am
தற்போது மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனை மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதை பெரிதும் விரும்புகின்றனர். இதில், மிகவும் பிரபலமானது அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தான். இதில் ப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ப்ளிப்கார்ட் ஃபீரிடம் சேல்' சிறப்பு கொண்டாட்டத்தில் பல அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு தள்ளுபடி : * ப்ளிப்கார்ட் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி(நேற்று) தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. * இந்த அதிரடி சலுகைகளில் மொபைல் போன், டிவி, லேப்டாப், டேப்ளெட், ஹெட்போன், கேமரா, மற்றும் இதர பாகங்களுக்கு தள்ளுபடி அளித்துள்ளது. * எச்.டி.எப்.சி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் உடனடி தள்ளுபடி. இது உங்களுக்கு... * சியோமி கருவி வாங்க விரும்பும் வாடிக்கையாளரா? அப்படினா இது உங்களுக்கு தான். * ரெட்மீ நோட் சியோமி சாதனங்களுக்கு விற்பனை 72 மணி நேரம் இயங்கவுள்ளது. எச்டிஎப்சி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் உடனடி தள்ளுபடிகளும் இருக்கும். * ப்ளிப்கார்ட் தி பிக் ப்ரீடம் சேல் என்ற பெயரில் சில பிராண்ட்கள் சார்ந்த சலுகைகளை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. அதன் விபரம் : * ரூ.15999 மற்றும் ரூ.16999 மோட்டோ எம் மற்றும் மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.12999 மற்றும் ரூ.14999க்கு கிடைக்கும். * ரூ.12499 லெனோவா கே5 நோட் ரூ.9999க்கு கிடைக்கும். ரூ 9999 கே6 பவர் ரூ.1000 தள்ளுபடியில் ரூ.8999க்கு கிடைக்கும். * ரூ.67000 கொண்ட கூகுள் பிக்சல் எக்ஸ்எல் கருவிகளை ரூ.48999க்கு ப்ளிப்கார்ட் சலுகையில் அளித்துள்ளது. இது மட்டுமின்றி ஐபோன் 6 (32ஜிபி) கருவிக்கு விலைக்குறைப்பு கிடைக்கும். * இந்த விற்பனையில் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ.1000 வரையிலாக பழைய ஸ்மார்ட்போனிற்கு எக்ஸ்சேன்ஜ் மதிப்பும் பெறுவார்கள். இந்த விற்பனையின் கீழ் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு 12 சதவிகிதம் அதிக விலைக்கு எடுத்துக் கொள்ள முடியும். ப்ளிப்கார்ட் வழங்கியுள்ள இந்த சுதந்திர தினச் சலுகையை பெற்று பயன்பெறுங்கள். இந்த அதிரடி ஆஃபர்கள் மூலம் உங்கள் விருப்பமான பொருட்களையும் வாங்கி மகிழுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close