பதஞ்சலியின் வெற்றி ரகசியம் : மனம் திறக்கும் முன்னாள் சிஇஓ

Last Modified : 10 Aug, 2017 02:35 pm

மனிதனின் தலை முதல் கால் வரை உடலுக்கு உள்ளேயேயும், வெளியேயும் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இன்று விற்பனை செய்து வருகிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். 2006-ஆம் ஆண்டு ஆயுர்வேத பொருட்கள் விற்பனை நிறுவனமாக ஆரம்பித்த பதஞ்சலி இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. பதஞ்சலியின் இந்த வெற்றிக்கான ரகசியம் குறித்து அதன் முன்னாள் சிஇஓ எஸ்.கே பத்ரா தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். "பாபா ராம் தேவ் எதையும் கூர்ந்து கவனிக்க கூடியவர். மிகுந்த புத்திகூர்மை உடைய அவர், எதையும் வேகமாக கற்றுக் கொள்வார். ஆரம்ப காலத்தில் பொருட்களை விளம்பரப்படுத்துவது தேவையற்றது என ராம்தேவ் கருதினார். அவரின் அந்த எண்ணத்தை மாற்ற மிகுந்த கஷ்டப்பட்டேன். இறுதியில் விளம்பரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். 4 கோடி ரூபாய் விளம்பர ஒப்பந்தத்தை பெற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சாவன்பிராஷ்-ஐ பத்திரிக்கை நிறுவன ஒன்றின் உரிமையாளருக்கு அளித்தார். நிறுவனம் துவங்கிய புதிதில் நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. திறமையாக செயல்பட்டு அவற்றில் இருந்து பாபாராம்தேவ் நிறுவனத்தை மீட்டார். நிறுவனம் சார்ந்த அனைத்து முக்கிய முடிவுகளையும் ராம்தேவே எடுப்பார். லாபம் குறித்து எப்போதுமே பதஞ்சலி நிறுவனம் யோசித்தது இல்லை. பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே பாபா ராம்தேவ் குறியாக இருந்தார்" என தனது பேட்டியில் பத்ரா தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close