'ரேமண்ட்ஸ்' நிறுவனருக்கே இப்படியா....? அதிர்ச்சியில் வணிக உலகம்

  jvp   | Last Modified : 13 Aug, 2017 03:36 pm
பலருக்கும், கோட் ஷூட் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது 'ரேமண்ட்ஸ்' பிராண்டாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அந்த நிறுவனம் அவ்வளவு ஃபேமஸ். இப்போது அந்த நிறுவனம் குறித்த வெளியாகியிருக்கும் செய்தி ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. அதாவது அந்த நிறுவனத்தை நிறுவி தொழிலதிபராகவும் இந்தியாவின் ஒரு டாப் பணக்காரராகவும் இருந்து வந்த விஜய்பட் சிங்கானியா, வயதாகி விட்டதாலும் இனி பணியினைத்தொடர முடியாது எனக் கருதியதாலும் வணிகப் பொறுப்புகளை அவருடைய மகன் கவுதம் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் விஜய்பட் சிங்கானியா தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,"சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எனது மகனுக்கே கொடுத்துவிட்டேன், இதனால் தற்போது பணமில்லாமல் இருக்கின்றேன். எனது மகன் தங்கியிருக்கும் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலே என்னை அனுமதிக்கவும் மறுக்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த பக்கம் சென்றால் என் மகன் கவுதம் என்னைத் தாக்குகிறார். எனவே எனக்குக் குடியிருப்பைத் தர உத்தரவிடவேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close