ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.19,000 கோடி கொடுக்கும் கூகுள்

  shriram   | Last Modified : 15 Aug, 2017 10:28 pm
உலகின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவனமான ஆப்பிளுக்கு, கூகுள் நிறுவனம் சுமார் 19,000 கோடி ரூபாய் கொடுக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் போன்களில், அடிப்படை தேடும் செயலியாக கூகுளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இந்த தொகை வழங்கப்படுகிறது. 2014ம் ஆண்டு இதற்காக சுமார் 6500 கோடி ரூபாய் கொடுத்த நிலையில், 3 ஆண்டுகளில் அது மும்மடங்காக உயர்ந்துள்ளது. ஆப்பிளின் லாபத்தில் இது 5 சதவீதமாகும். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் சேவைக்கு மொபைல்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் 50% பங்கு வகிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close