நிலுவையில் 62 நிலக்கரித் திட்டங்கள் : மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுமா?

Last Modified : 16 Aug, 2017 05:24 pm
பொதுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனம் (கோல் இந்தியா) கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% இந்நிறுவனம் பங்களிக்கிறது. உலகிலேயே பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகவும் உள்ளது. மொத்தமுள்ள 120 நிலக்கரி திட்டங்களில், 58 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீதியுள்ள 62 திட்டங்களைத் தொடங்குவதில் தாமதமாகியுள்ளது. நிலக்கரி திட்டம் தொடர்பான காட்டுப்பகுதியில் உள்ள சில இடங்களை கொடுக்க வனத்துறை கால தாமதம் ஆக்குவது, இந்தியாவில் நில ஆக்கிரமிப்பும் தற்போது அதிகமாகிஇருப்பது போன்ற காரணங்களால் திட்டங்கள் நிலுவையில் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் தேவைல்லாத 37 சுரங்கங்கள் இந்திய நிலக்கரி நிறுவனத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 8 முக்கிய நிலக்கரி சுரங்கத் திட்டம் 8,931 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டன. இதில் மிகக்குறைந்த செலவில் 7 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. ஒவ்வொரு திட்டமும் சுமார் 20 கோடி ரூபாய் அளவிலே முடிக்கப்பட்டது. இதன் மூலமாக ஒரு வருடத்திற்கு 2.42 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 8 மாநிலங்களைச் சேர்ந்த 82 சுரங்க இடங்கள் உள்ளன. 193 சுரங்கங்கள் பூமிக்கு அடியிலும், 177 சுரங்கங்கள் பூமியின் மேற்பரப்பிலும், 24 சுரங்கங்கள் இரண்டுக்கும் பொதுவாகவும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close