பங்குச்சந்தை நிலவரம் ; சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்வு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 31,805 புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து, முடிவில் 9,900.85 என்ற புள்ளிகளில் முடிந்தது. சிப்லா, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஏசியன் பெயிண்ட், பவர் கிரிட் கார்ப்பரேஷன், தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி), இன்போசிஸ், போன்ற நிறுவங்களின் பங்குகள் சரிந்தன. வங்கியைப் பொறுத்தவரையில் ஐடிஎப்சி வங்கி அதிக லாபத்தை (2.02%) எட்டியுள்ளது. இந்த வங்கி ஒரு பங்கை ரூ.55.55க்கு விற்றது. இதர வங்கிகளான எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா வங்கி, எச்டிஎப்சி வங்கிகளின் பங்குகள் 1% உயர்வை சந்தித்துள்ளன. எஸ் பேங்க், இன்றைய பங்குச்சந்தையில் சரிவை சந்தித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close