• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்தியாவில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் தங்கம் இறக்குமதி சமீபத்தில் அதிகரித்தே காணப்படுகிறது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை விட இந்த வருடம் ஜூலையில் 95.05% அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதமும் தங்கம் இறக்குமதி இரட்டிப்பானது. அடுத்ததாக, மின்னணு சாதன பொருட்கள் 22.5% அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் 15%, மின் சாதன பொருட்கள் 7.34% , விலைமதிப்புள்ள கற்கள், ரத்தினங்கள் போன்றவை 6.86% அதிகமாக இந்த ஜூலை மாதம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவின் இறக்குமதி கடந்த மாதத்தில் மட்டும் 10.70% அதிகரித்துள்ளது. அதாவது 2016 ஜூலையில் இந்தியாவின் இறக்குமதி 1,97,932 கோடி ஆகும். 2017 ஜூலையில் இறக்குமதி மதிப்பு 2,19,108 கோடியாக அதிகரித்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.