4G VoLTE வசதி கொண்ட Lyf C451

Last Modified : 01 Jan, 1970 05:30 am

'Connect' ரகத்தில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுப்படுத்தி உள்ளது. இந்த போனிற்கு Lyf C451 எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் வெளிவந்துள்ள இந்த போன் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம். டூயல் மைக்ரோ சிம் கொண்ட Lyf C451, 4G VoLTE வசதி கொண்டதாகும். 4.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன் பக்க கேமரா, 2800mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v4.1, GPS/ A-GPS, எஃப்.எம் ரேடியோ, 3.5mm ஆடியோ ஜாக், OTG உடன் கூடிய Micro-USB போன்றவையும் இதில் உள்ளன. இந்த மொபைலின் விலை 4,999 ரூபாயாகும். ஜியோ வின் தன் தனா தன் மற்றும் 20% கூடுதல் டேட்டா போன்ற ஆஃபர்களும் இந்த மொபைலுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.