ரூ.500-க்கு 100 ஜிபி டேட்டா; வாடிக்கையாளர்களை ஏமாற்றிய போலி ஜியோ ஆஃபர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஃபைபர் எனும் புதிய திட்டத்தின் மூலமாக பிராட்பேண்ட் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்த தயாராகி வருகிறது. தீபாவளி முதல் இந்த ஜியோ ஃபைபர் சேவை செயல்பாட்டுக்கு வரும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் முகேஷ் அம்பானியின் மகளும், ரிலையன்ஸ் நிறுவன இயக்குனர்களில் ஒருவருமான இஷா அம்பானி, ஜியோ ஃபைபர் மூலம் 500 ரூபாய்க்கு 100 ஜிபி டேட்டா அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இஷா அம்பானி பெயரில் செயல்பட்டு வந்த ட்விட்டர் கணக்கில் இந்த அறிவிப்பானது வெளியாகி இருந்தது. இதனை அடுத்து ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இஷா அம்பானி வெளியிட்டதாக கூறப்படும் அறிவிப்பு போலியானது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ட்விட்டர் கணக்கு இஷா அம்பானிக்கு சொந்தமானது இல்லை என்றும், அது போலி கணக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த கணக்கு நீக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபரை எதிர்பார்த்துக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் இதனால் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close