டிரம்ப்பின் ட்வீட்டால் அமேசான் நிறுவனத்திற்கு 36 ஆயிரம் கோடி இழப்பு

Last Modified : 17 Aug, 2017 04:02 pm
ஆன்லைன் விற்பனையில் முன்னணி நிறுவனமான அமேசான் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மற்ற நாடுகளில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் தொடர்ந்து ஆன்லைன் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது, அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமேசான் நிறுவனம் பற்றி ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், "அமேசான் நிறுவனத்தால், வரி செலுத்தும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நிறுவனத்தால் அவர்களின் விற்பனை பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் பலர் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்" என குறிப்பிட்டிருந்தார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில மணி நேரத்தில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அந்நிறுவனத்திற்கு இதனால் 36,600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close