புகைப்படப்பிரியர்களுக்காக 3 கேமராக்கள் கொண்ட புதிய ஏஸஸ் போன் அறிமுகம்

Last Modified : 17 Aug, 2017 04:27 pm
தைவான் நிறுவனமான ஏஸஸ் (Asus), வரும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட நாளை முன்னிட்டு "ஸென்போன் ஸூம் எஸ்" (zenfone zoom s) என்ற புதிய போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. புகைப்பட பிரியர்களை கவரும் வகையில் இந்த போனில் 3 கேமராக்கள் வைத்து உருவாக்கியுள்ளனர். முன்பக்கம் 12எம்பி அளவிலும், பின்புறத்தில் 13எம்பி அளவில் இரண்டு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.26,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட்டில் இது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏஸஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த போனில் 3 கேமராக்கள் உள்ளதால் வாடிக்கையாளர்களிடம் இந்த மொபைல் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஸஸ் போனின் இதர அம்சங்கள் : * போன் அளவு 5.5 இன்ச், * இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64ஜிபி, * ரேம் 4ஜிபி * பேட்டரி 5000mAh * மெமரி கார்டு 2டிபி * எடை: 170கிராம் * கலர் : நேவி பிளாக் மற்றும் க்ளாஸியர் சில்வர் என்ற இரண்டு கலரில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close