'ரெட்மி' புது போன் வெளியீட்டுத்தேதி அறிவிப்பு

  jvp   | Last Modified : 17 Aug, 2017 07:45 pm
ரெட்மி போன்களுக்கு எனத் தனிச்சந்தையே இங்கே உருவாகிவிட்டது. அந்த நிறுவனத்திலிருந்து எந்த போனை வெளியிட்டாலும் முதல் ஆளாக ஒரு அட்மிசனை போட்டுவிடுகின்றனர் இளசுகள். அந்த வகையில் இளசுகளுக்கு ஒரு செம செய்தி ஒன்று சிக்கி இருக்கின்றது. ஆமாம். ரெட்மி தனது அடுத்த வெளியீடாக ஒன்று அல்ல இரண்டு மாடல்களில் போன்களை வெளியிட இருக்கிறார்களாம். இது குறித்து பல செய்திகள் வந்திருந்தாலும் அதன் தேதி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21ம் தேதியன்று மாலை 5 மணிக்கு ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும், உயர் ரக மாடலில் மட்டும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 5A பேசிக் மாடல் ஏற்கனவே விற்பனையாகி வரும் ரெட்மி 4Aவின் அப்டேட்டேட் வெர்சனாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. வெளியாகவிருக்கும் போனின் தோராய வடிவங்கள்: சியோமி ரெட்மி நோட் 5A: 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி திரை, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி , 5 எம்பி செல்ஃபி கேமரா சியோமி ரெட்மி நோட் 5A பிரைம் / ப்ரோ: 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி திரை ,3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி , 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் 13 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஃபிங்கர் ஸ்கேனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close