Swipe நிறுவனத்தின் புதிய அறிமுகம் Swipe Elite 4G

Last Modified : 01 Jan, 1970 05:30 am

4G VoLTE வசதி கொண்ட Swipe Elite 4G எனும் ஸ்மார்ட்போனை Swipe டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் கூடிய 5 இன்ச் தொடுதிரை இந்த போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்கக் கூடிய இப்போனில், 1 ஜிபி ரேம் உடன் கூடிய குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாரும் உள்ளது. பின் பக்கத்தில் 8 MP திறனுள்ள கேமராவும், முன் பகைஹத்தில் 5 MP திறனுள்ள கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம் (நேனோ + மைக்ரோ), 2500mAh பேட்டரி போன்றவையும் உள்ளன. ஃப்ளிப்கார்டில் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை 3,999 ரூபாயாகும். அறிமுக சலுகையாக 3,500 ரூபாய் வரை இதற்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடியும் அளிக்கப்படும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.