ஹெச்டிஎப்சி, யெஸ் வங்கிகளின் வட்டி விகிதம் குறைப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இரண்டு வங்கிகளும் தங்களது சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தில் இருந்து 0.5 சதவீதம் குறைத்துள்ளன. ஹெச்டிஎப்சி வங்கியில் ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 4% லிருந்து 3.5% ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக சேமிப்பு இருந்தால் முன்னதாக இருந்த 4% வட்டிமுறை தொடரும் என கூறியுள்ளது. ஆகஸ்ட் 19ம் தேதியிலிருந்து ஹெச்டிஎப்சியின் புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது. யெஸ் வங்கி ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள சேமிப்பு கணக்கு வட்டியை 1 % குறைத்துள்ளது. அதாவது முன்பு இருந்த 6% லிருந்து 5% ஆக குறைத்துள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் 1 கோடி ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கிற்கு 6 % வட்டிமுறை தொடரும் என்று கூறியுள்ளது. சேமிப்பு கணக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் 6.25% இருக்கும். இதற்கு முன்பு 6.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. யெஸ் வங்கியின் இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து இந்தியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 7 வங்கிகள் சேமிப்பு கணக்குக்கான வட்டியை குறைத்திருக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close