பங்குச்சந்தை சரிவு : சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைந்தது

Last Modified : 18 Aug, 2017 05:09 pm

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 271 புள்ளிகள் குறைந்து, வர்த்தக நேர முடிவில் 31,524.68 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 67 புள்ளிகள் குறைந்து, முடிவில் 9,837.40 புள்ளிகளுடன் முடிந்தது. இன்றைய நிலவரப்படி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், இன்போசிஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.

Advertisement:
[X] Close