13,000 கோடி ரூபாய் பங்குகளை வாங்குகிறது இன்ஃபோசிஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் ஷிக்கா நேற்று ராஜினாமா செய்தார். தற்காலிகமாக பிரவீன் ராவ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விஷால் ஷிக்கா ராஜினாமா செய்த ஒரு நாளில் 13,000 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளைத் திருப்பி வாங்குவதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் 11.3 கோடி பங்குகள் அல்லது மூலதனத்தில் இருந்து 4.92% வரையிலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. எனவே ஒரு பங்கின் விலை 1,150 ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதே போன்று டிசிஎஸ் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், விப்ரோ நிறுவனம் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் திரும்ப வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close