இரண்டு 13 MP பின்பக்க கேமரா கொண்ட Cool Play 6 ஸ்மார்ட்போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூல் பிளே 6 (Cool Play 6) ஸ்மார்ட்போனை கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 5.5 இன்ச் ஹச்டி தொடுதிரை கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. மேலும் இந்த வருட இறுதியில் ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனுக்கான அப்டேட் பெறும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் நேனோ சிம், 4000mAh பேட்டரி போன்றவை இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளன. சிறப்பு அம்சமாக இந்த மொபைலில் 13 MP திறனுள்ள ஃபிளாஷ் உடன் கூடிய இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் முன்பக்கத்தில் 8 MP திறனுள்ள கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை தவிர்த்து 4G VoLTE, வைஃபை, ப்ளூடூத் 4.0 போன்றவையும் இதில் அடங்கி உள்ளன. செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் விலை 14,999 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close