வாராக்கடன் பட்டியலில் முதலிடத்தில் எஸ்பிஐ வங்கி

Last Modified : 21 Aug, 2017 06:48 pm
கடந்த 2016-17 ம் ஆண்டு நிதியாண்டில் வங்கிகளுக்கு கடனை திருப்பி பெறமுடியாத வங்கிகளின் வாராக்கடன் அறிக்கையை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்குறிப்பிட்ட நிதியாண்டில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாதவர்கள் அதிகம் கொண்ட வங்கி எஸ்பிஐ (27%) என தெரிய வந்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் 1,762 கடன் தொடர்பான வங்கி கணக்குகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் 25,104 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டாம் இடத்தில் (13%) உள்ளது. இவ்வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது கடனை திருப்பி செலுத்தாததால், 12,278 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015-16 ம் ஆண்டு நிதியண்டை விட 2016-17 ம் ஆண்டு வாராக்கடன் 10% அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக வாராக்கடன் தொடர்பாக 8,915 வழக்குகள் உள்ளன. இதில் 32,484 கோடி ரூபாய் வரக்கூடிய 1,914 வழக்குகளுக்கு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close