இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக நேர முடிவில் 31,568 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து, 9,852.50 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நிஃப்டி 9,854.45 என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இன்றைய நிலவரப்படி, அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், சன் பார்மா, டெக் மஹிந்திரா, டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.

Advertisement:
[X] Close