அட்டகாச அம்சங்களுடன் களமிறங்கி இருக்கும் சாம்சங் கேலக்சி நோட் 8

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கேலக்சி நோட் 7-ஐ தொடர்ந்து கேலக்சி நோட் 8 எனும் புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நோட் 7-ல் பேட்டரி பழுது காரணமாக ஸ்மார்ட்போன்கள் வெடித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நோட் 7-ஐ சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்றது. சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இந்த நிலையில் தற்போது புதிதாக கேலக்சி நோட் 8-ஐ சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. தண்ணீர் மற்றும் தூசு தடுப்பு, கருவிழி ஸ்கேனர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவற்றை கொண்ட இந்த மொபைல் இரண்டு பின்பக்க கேமரா கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் எனும் சிறப்பையும் பெற்றுள்ளது. ஆப்பிள் போனில் உள்ள சிறி போன்று இந்த போனில் Bixby எனும் இன்டெலிஜெண்ட் அசிஸ்டன்ட் உள்ளது. இந்த மொபைலின் அடிப்படை அம்சங்களை பொறுத்தமட்டில், 6.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை, ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ், சாம்சங் நிறுவனத்தின் TouchWiz UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம் போன்றவை இடம்பெற்றுள்ளன. கேலக்சி எஸ்8 மற்றும் எஸ்8+ போன்று இந்த மொபைலும் 'Infinity Display-வை' கொண்டுள்ளது. இதன் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள 12 MP திறனுள்ள இரண்டு கேமராக்கள் வைடு - ஆங்கிள் லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளன. முன் பக்கத்தில் 8MP திறனுள்ள கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் 3,300mAh திறனுள்ள பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வையர்லஸ் சார்ஜிங் அம்சங்களை கொண்டுள்ளது. 4G VoLTE, ப்ளூடூத் 5.0, வைஃபை 802.11ac மற்றும் ஜிபிஎஸ் போன்றவையும் இதில் உள்ளன. 4 வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் இந்திய சந்தை விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close