ஜியோ போன் முன்பதிவு இன்று துவக்கம்; முன்பதிவு செய்வது எப்படி ?

Last Modified : 24 Aug, 2017 03:15 pm
மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த ஜியோ 4ஜி Feature போனின் முன்பதிவு இன்று ஆரம்பமாகிறது. இந்த போனை எங்கு, எப்போது, எப்படி முன்பதிவு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஜியோ 4ஜி போனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று மாலை 5 மணி முதல் முன்பதிவானது ஆரம்பமாகிறது. ஆஃப்லைன் முன்பதிவு: இந்த முறையில் முன்பதிவு செய்ய விரும்புவோர் அருகில் இருக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு கட்டணமாக 500 ரூபாய் வசூல் செய்யப்படும். மொபைல் டெலிவரி செய்யப்படும் போது வைப்பு தொகையான 1500 ரூபாயில் இருந்து இந்த 500 ரூபாய் கழித்துக் கொள்ளப்படும். ஆன்லைன் முன்பதிவு: ஆன்லைன் முறையில் மைஜியோ ஆஃப் மற்றும் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.jio.com மூலம் முன்பதிவு செய்யலாம். மைஜியோ ஆப் மூலம் முன்பதிவு செய்ய, முதலில் அந்த ஆபை ஓபன் செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முன்பதிவு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் போன் நம்பர் மற்றும் உங்கள் பகுதி அஞ்சல் நிலைய பின்கோடு எண் போன்ற தகவலை அளிக்க வேண்டும். முன்பதிவு உறுதி செய்யப்பட்ட உடன் உங்கள் மொபைலுக்கு முன்பதிவு எண் அடங்கிய ஒரு எஸ்.எம்.எஸ் வரும். இந்த முறையில் மொபைல் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யப்பட மாட்டாது. அருகில் இருக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்கு சென்று முன்பதிவு எண்ணை காட்டி நீங்கள் மொபைலை பெற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் ஸ்டோர் முகவரி எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். இந்த முறை மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோர், உறவினர் என யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் போன் நம்பர் மற்றும் அஞ்சல் நிலைய பின்கோடு எண் தகவல்களை அளிக்க வேண்டும். ஜியோ தன் தனா தன் ஆஃபர் மூலம் மாதம் 153 ரூபாய்க்கு இந்த போனுக்கு ரீ - சார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால், மெசேஜ் மற்றும் டேட்டா போன்றவையும் கிடைக்கும். 54 ரூபாய் மற்றும் 24 ரூபாய் மதிப்புடைய இரண்டு சிறப்பு பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close