இன்ஃபோசிஸின் புதிய சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஷால் ஷிக்கா தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே, நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயல் அதிகாரியாக பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் நிறுவனத்தின் சேர்மனாக இருந்த ஆர்.சேஷசாயி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து நிறுவனத்தின் புதிய சேர்மனாக நந்தன் நிலகேனி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். விஷால் ஷிக்கா இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து செயல்படுவார் எனவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. நிறுவனக் குழுவின் இணைத் தலைவர் பதவியில் இருந்து ரவி வெங்கடேசனும் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால் சார்பற்ற தனித்த இயக்குநராக குழுவில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close