'LAVA' ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு வருட வாரன்டி

  shriram   | Last Modified : 25 Aug, 2017 08:22 pm
இந்திய போன் நிறுவனமான லாவா, தனது ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு வருட வாரன்டி தருவதாக அறிவித்துள்ளது. பொதுவாகவே ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய நிறுவனங்கள் சுமார் 1 வருட வாரன்டி கொடுப்பது வழக்கம். சிறிய நிறுவனங்கள் பல, 6 மாதங்களுக்கு மேல் கொடுப்பது இல்லை. மேலும், சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவதானால், பொதுமக்கள் பெரிய நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்து வாங்கி வருகின்றனர். இதற்கு ஏற்றாற்போல, சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களும் ரூ.10,000க்கும் குறைவாக பல ஸ்மார்ட்போன்கள் விற்பனையை துவங்கியுள்ளன. சில வருடங்களுக்கு முன்னால் வரை பெரிதாக வளர்ந்து வந்த லாவா, ரெட்மி போன்ற நிறுவனங்களின் நுழைவால் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதனால், ஆகஸ்ட் 26ம் தேதியிலிருந்து விற்பனையாகும் ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும், இனி வரும் மாடல்களுக்கு இரண்டு வருட வாரன்டி கொடுப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 4,000 ரூபாய்க்கே 4ஜி ஸ்மார்ட்போன் வழங்கும் லாவா நிறுவனத்தின் மீது இனி இளைஞர்களின் பார்வை திரும்பும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய நிறுவனங்களில் 2 வருட வாரன்டி வழங்கும் ஒரே நிறுவனம் லாவா தான் என அந்நிறுவனத்தின் தலைவர் கௌரவ் நிகாம் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close