16 MP செல்ஃபி கேமரா கொண்ட Vivo Y69

Last Modified : 01 Jan, 1970 05:30 am

செல்ஃபி பிரியர்களுக்காக விவோ நிறுவனம் புதிதாக Vivo Y69 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. முதலில் கூறியது போலவே செல்ஃபி பிரியர்களுக்காக 16MP திறனுள்ள கேமரா இதன் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் சிறப்பான செல்ஃபிகளை எடுப்பதற்காக 'Moonlight Glow light' வசதியும் இதில் உள்ளது. கொரில்லா கிளாஸ் 3-ஆல் பாதுகாக்கப்பட்ட 5.5 இன்ச் அளவுள்ள தொடுதிரை, Funtouch OS 3.2 உடன் கூடிய ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம், டூயல் நேனோ சிம், ஆக்டா-கோர் ப்ராசெஸ்ஸார், 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP திறனுள்ள டூயல் பிளாஷ் உடன் கூடிய பின்பக்க கேமரா, 3000mAh பேட்டரி போன்றவை இதில் உள்ளன. மேலும், 4G VoLTE, வைஃபை 802.11 a/b/g/n, ப்ளூடூத் v4.2 போன்ற தகவல் தொடர்பு வசதிகளும் உள்ளது. கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் விலை 14,990 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.