ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் அதிரடி சலுகை

Last Modified : 26 Aug, 2017 05:38 pm

ஜியோ நிறுவனம் மொபைல் போன் குறித்த பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் சீனாவின் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஆஃபர்களை வழங்க உள்ளது. ஐடெல் 2ஜி பீச்சர்போன் வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 800 ரூபாய் முதல் 1600 ரூபாய் வரையுள்ள ஐடெல் போன்களில் 17 வகையான மாடல்கள் உள்ளன. ஐடெல் 2ஜி பீச்சர்போனுடன் முதலில் 100 ரூபாய்க்கு அதிகமாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து அந்த வாடிக்கையாளருக்கு மாதம் தோறும் 50 ரூபாய் இலவச டாக்டைம் தொடர்ந்து 18 மாதங்களுக்கு வழங்கப்படும். மேலும், 800 ரூபாய் போன் வாங்கினால், ரீசார்ஜ் செய்த 100 ரூபாயும் சேர்த்து மொத்தம் 900 ரூபாய் வரை கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close