ஜூலையில் இருந்து ரூ.6 உயர்ந்த பெட்ரோல்... தினமும் உயர்ந்ததால் யாருக்கும் தெரியவில்லை!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. தினசரி பைசா கணக்கில் விலை உயர்ந்ததால் இதுபற்றி யாருக்கும் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் - டீசல் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தினாலே பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. ஒரு ரூபாய் விலை உயர்த்தினால் கூட எதிர்க்கட்சிகள் காரை மாட்டைக் கட்டி இழுப்பது, மண்எண்ணெய், விறகு அடுப்பில் சமைப்பது என்று போராட்டம் நடத்துவார்கள். கடந்த மாதத்துக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இருமுறை மாற்றி அமைத்தன. அப்போது விலை உயர்வு வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், ஜூலை மாதம் முதல் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. தொடக்கத்தில் சில பைசாக்கள் விலை குறைந்தது. அதன்பிறகு, உயர ஆரம்பித்த பெட்ரோல், டீசல் விலை இன்றுவரை இறங்கவே இல்லை. தினமும், இரண்டு பைசா, ஐந்து பைசா, 10 பைசா என்று விலை உயர்ந்துகொண்டே சென்றது. கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 3.67 ரூபாயும் உயர்ந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. தினமும் பைசா கணக்கில் விலை உயர்ந்துவந்ததால் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் புயல் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன விலை உயர்ந்தாலும் பொது மக்களுக்குத் தெரியவாப் போகிறது... அதுதான் பழகிவிட்டதே!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close