வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக பாபா ராம்தேவின் ஆப்

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Jun, 2018 10:30 am

baba-ramdev-introduced-new-messaging-app-kimbho

பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து “சுவதேசி சம்ரிதி சிம்” கார்டுகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இதையடுத்து வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக கிம்போ எனும் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிம்கார்டை அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்காக அதை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அது பொது மக்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிக டேட்டா, இலவச வாய்ஸ் கால் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் எத்தனையோ ஆப்கள் இருந்தாலும் அவற்றைவிட அதில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்புக்கே மவுசு அதிகம். வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்காகவே ஸ்மார்ட்போனை நாடுபவர் இன்றும் உள்ளனர். வாட்ஸ் அப்புக்கு இணையாக பல செயலிகள் வந்தாலும் வாட்ஸ் அப்பிற்கு என்று அனைவரது மொபைலிலும் தனி இடம் உண்டு.

இந்நிலையில் வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக, கிம்போ என்ற செயலியை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிம்போ என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. நலமாக இருக்கிறீர்களா என்பதே கிம்போ என்பதன் பொருள். 

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜாராவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “கிம்போ ஆப்பை, கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுதேசி மெசேஜிங் பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி அழைப்புகள், வீடியோ காலிங் வசதிகளோடு மட்டுமல்லாது ஆடியோ, போட்டோஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கீஸ், லொகேசன், ஜிப், டூடூல் உள்ளிட்ட வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும் கிம்போ செயலி பதஞ்சலி நிறுவனம் தயாரித்தது அல்ல, அது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்ட ‘போலோ மெசேஞ்சர்’ செயலி என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்குள்ளாக இந்த செயலி பற்றிய விமர்சனங்களும் வந்துவிட்டன. இது போலோ எனப்படும் வாட்ஸ் அப் போன்ற மற்றொரு ஒரு தகவல் தொடர்பு ஆப்பின் காப்பி என்றும், இதில் அனுப்பும் தகவலை ஈஸியாக ஹேக் செய்து பார்க்க முடிகிறது என்றும் சைபர் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.