கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹெச்டிஎஃப்சி மொபைல் ஆப் நீக்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 02:39 am
hdfc-bank-to-relaunch-old-app-shortly

கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹெச்டிஎஃப்சி பேங்க் மொபைல் ஆப் திடீரென நீக்கப்பட்டது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

புதிய மற்றும் உயர்பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மொபைல் பேங்கிங் ஆப்பை மேம்படுத்தி ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டது. ஆனால் பரிவர்த்தனைகளின்போது திடீரென செயல்படாமல் போவதாக ஆப் குறித்து பயனாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆப்பில் சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட ஹெச்டிஎஃப்டி வங்கி, அதை கூகுள் பிளே, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றிவிட்டது. இதனால் மொபைல் ரீசார்ஜ், கட்டணங்கள் செலுத்துவது போன்றவற்றிற்கு பயனாளர்கள் PayZapp-ஐ சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆப்பின் முந்தைய பதிப்பை பயன்படுத்திக் கொள்வதில் சிக்கல் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. NetBanking, PayZapp, PhoneBanking  போன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close