வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 05:34 pm
gold-price-rised

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.25,568ஆக உள்ளது. இதன்மூலம் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

சர்வதேச பொருளாதாரம், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.25,520 ஆக இருந்தது. இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.25,568ஆக உள்ளது.

இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரையில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ.3,196க்கு விற்கிறது.

மேலும், சர்வதேச பொருளாதாரம் சற்று மோசமடைந்ததாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், தங்கம் விலை உயர்வதாக வணிக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close