புதிய பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்-6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!

  சாரா   | Last Modified : 13 Feb, 2020 07:09 pm
bajaj-pulsar-150-bs6-model-launched-in-india

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முற்றிலும் புதிய பஜாஜ் பல்சர் 150 பிஎஸ்-6 பைக்கை ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 வாகன விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதற்காக பல்வேறு வாகன நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்புகளை புதிய விதிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வரிசையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 பைக்கை பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்றவாறு உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பைக்கில் பல்சர் 150 மற்றும் பல்சர் 150 ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்டுகள் இடம்பெற்றுள்ளன.இந்த பைக்கில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ஃப்யூவெல் இஞ்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான செயல்திறன் மற்றும் எரிவாயு சிக்கனத்தை வழங்கும் விதத்தில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

                                                  

பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 149.5 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக், எஸ்.ஓ.ஹெச்.சி டிடிஎஸ்-ஐ எஞ்சின் கொண்டுள்ள புதிய பஜாஜ் பல்சர் 150 பைக் 13 பிஎச்பி பவர் மற்றும் 13.25 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்புறத்தில் 31 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ட்வின் கேஸ்-ஃபில்லிடு ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

                                                      

இந்த புதிய பைக்கிற்கு ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 150 மாடலை தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் மேலும் பல புதிய வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close