ஆட்டோ எக்ஸ்போ 2018: கலக்கப் போகும் புதிய மாடல்களை பார்த்தீர்களா?

  SRK   | Last Modified : 07 Feb, 2018 07:37 pm

நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோமொபைல் எக்ஸ்போ 2018ல் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புகளை வெளியிட குவிந்துள்ளன...

இன்று முதல் துவங்கும் கண்காட்சியில், இரண்டு நாட்கள் ஊடகங்களுக்காகவும், அதன் பின் 14ம் தேதி வரை பொது மக்களுக்காகவும் வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

அதிக கவனத்தை ஈர்த்த ஹோண்டா நிறுவனம், தனது 3 கார்களின் புதிய மாடல்களை வெளியிட்டது. ஹோண்டா அமேஸ், சி.ஆர்.வி மற்றும் சிவிக் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன

மொத்தம் 9 மாடல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடவுள்ளதாக ஹோண்டா தெரிவித்தது

தென் கொரிய நிறுவனமான கியா, பிரத்யேகமாக இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட தனது புதிய எஸ்பி என்ற எஸ்.யு,வி கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல ஐ20 காரின் புதிய மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது

இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாருதியின் பிரீசாவை தொடர்ந்து, சிறிய எஸ்.யு.வி வாகனங்களின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்தது

இதற்காக 'கான்செப்ட் பியூச்சர் எஸ்' என்ற புதிய டிசைனை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போர்வையில் அடுத்து பல கார்களை தான் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இது முழுக்க முழுக்க மாருதி சுசுகியின் சொந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டதாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close