மேலும் 6 லட்சம் கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா!

  SRK   | Last Modified : 10 Jan, 2018 07:47 am


அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் சுமார் 6 லட்சம் கார்களை, ஏர்பேக் மாற்றம் செய்துகொடுக்க டொயோட்டா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. 

அமெரிக்க போக்குவரத்துத் துறையின் கோட்பாடுகளை கடைபிடிக்காமல் ஆபத்தான ஏர்பேக் இன்ஃப்லேட்டர்களை உருவாக்கியதற்காக, ஜப்பான் நாட்டை சேர்ந்த டகாடா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2016ல் தாங்கள் செய்த தவறை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி கார்களில் இந்த நிறுவனத்தின் ஏர்பேக்குகள் இருப்பதால், அவற்றை மாற்ற பல்வேறு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

இதுவரை 4.6 கோடி கார்களில் இந்த ஏர்பேக்குகள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் உள்ள தனது நிறுவனத்தின் 6,01,300 கார்களை டொயோட்டா நிறுவனம் தற்போது திரும்ப பெற்றுள்ளது.

வெடித்து விடும் தன்மை கொண்ட இந்த ஏர்பேக் இன்ஃப்லேட்டர்களால், இதுவரை உலகம் முழுவதும் 20 பேர் பலியாகியுள்ளார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close