2.51 லட்சம் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள் திரும்ப பெறப்பட்டன!

  SRK   | Last Modified : 08 Feb, 2018 10:54 am


பிரபல ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்னையால், சுமார் 2.51 லட்ச வாகனங்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்ஸன். 'புல்லட்' போன்ற க்ரூஸர் பைக் வாகனங்களை இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரித்து வருகிறது. பைக்கர் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே இந்த நிறுவனம் தான். இந்தியாவிலும் ஹார்லி டேவிட்ஸன் நிறுவனத்தின் வாகனங்கள் தற்போது சக்கை போடு போட்டு வருகின்றன. 

இந்நிலையில், அந்நிறுவனம் தயாரித்த குறிப்பிட்ட கால பைக்குகளில் பிரேக் பிரச்னை இருப்பதாக கூறி 2.51 லட்ச வாகனங்களை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது. 

2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட சிவிஓ டூரிங் மற்றும் விஆர்எஸ்சி ஆகிய இரண்டு மாடல் பைக்குகளில், ஹார்லி டேவிட்ஸன் புகுத்திய ஆன்டி - லாக்கிங் பிரேக் தொழில்நுட்பத்தில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பிரேக்கில் பிரச்னை ஏற்பட்டால், அது எந்த அறிகுறியும் இல்லாமல் செயலிழந்துவிட வாய்ப்புள்ளதாம். 

2016ம் ஆண்டு, அமெரிக்காவில் பல இடங்களில் இந்த பிரேக் பிரச்னை ஏற்படுவதாக 46 குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் 3 விபத்துகள் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. 

இந்த மாடல்களில் விற்கப்பட்ட 2.51 லட்சம் வாகனங்களில் 1.75 லட்ச வாகனங்கள் அமெரிக்காவில் விற்கப்பட்டதாம். இதை திரும்பப் பெற்று, அந்த பிரேக்கிங் தொழில்நுட்பத்தை சீரமைத்துக் கொடுக்க ஹார்லி டேவிட்ஸன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்துக்கு 189 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close