ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட் X வந்தாச்சு!

  SRK   | Last Modified : 28 Feb, 2018 04:37 pm


ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்ததாக தண்டர்பேர்ட் X என்ற பெயரில் இரண்டு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது.

350 சிசி மற்றும் 500 சிசி திறன் எஞ்சின் திறன் கொண்ட இந்த பைக்குகள், விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பைக்குகளுமே பார்ப்பதற்கு ஒன்று போல தான் தெரிகின்றன. ஆனால், 350X மாடல் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களிலும், 500X  மாடல், ஆரஞ் மற்றும் நீல நிறங்களில் வெளியாகிறது. 

5 கியர்கள், இரண்டு டயர்களிலும் டிஸ்க் பிரேக் வசதிகள் இவற்றில் உள்ளன. ஆனால், ஏ.பி.எஸ் பிரேக் வசதி, இந்த இரண்டு வகை பைக்குகளிலும் கிடையாது. 350X மாடல், 19.8 குதிரைத்திறன் வேகத்தையும், 500X மாடல் 27.2 குதிரைத்திறன் வேகத்தையும் வெளிப்படுத்தும். 

350X-ன் விலை 1.56 லட்ச ரூபாய் என்றும், 500X-ன் விலை 1.98 லட்ச ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close