250சிசி, 160சிசி கொண்ட ஹோண்டாவின் லேட்டஸ்ட் பைக்...

  SRK   | Last Modified : 31 Mar, 2018 07:58 pm


இந்திய சாலைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய மாடல் பைக்குகளை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

சிபிஆர் 250R பைக்கின் புதிய மாடல், 26.5 குதிரைத்திறன் பவர் கொண்டுள்ளது. இது இரண்டு வகைகளில் வெளியாகிறது. நவீன ABS திறன் கொண்ட பிரேக் உள்ள ஒரு மாடலும், ABS இல்லாமல் ஒரு சாதாரண மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. DOHC என்ற நவீன எஞ்சினும் இதில் உள்ளது. இதன் விலை ரூ.1,63,584 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல ஹார்னட் 160R என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.84,675ல் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலும் ABS உள்ளிட்ட பிரேக் கொண்ட 4 வகை மாடல்கள் வெளியாகின்றன. 

Advertisement:
[X] Close