ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்: சிறப்புகள் என்னென்ன?

  PADMA PRIYA   | Last Modified : 07 Mar, 2018 03:11 pm

8-வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட வட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு, காப்பீடு, வரி அனைத்தும் சேர்ந்து 9.5 கோடி ரூபாயிலிருந்து 11.30 கோடி ரூபாய் வரை இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் ஆடம்பரமான காராக கருதப்படும் இந்த காரின் 4 ஆண்டுகள் பராமரிப்பு கட்டணம், வாரன்டி, பழுதாகும் இடத்திற்கே வந்து பழுது நீக்கித்தருதல் ஆகியவையும் இந்த விலையில் அடங்கும்.

சிறப்புகள்: கிளம்பிய 6 நொடிகளுக்குள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடியது.

அதி நவீன இருக்கைகள் உயர்தரமான தோலில் செய்யப்பட்டுள்ளன.

இரவு வானத்தை பார்ப்பது போல் தோன்றும் அசாத்தியமான மேற்கூரை,

பட்டன்களை அழுத்தினாள் திறந்து மூடும் கதவுகள்,

இரைச்சல் இல்லாத சல்லென்றப் பயண அனுபவம்.

1925-ஆம் ஆண்டில் முதன்முதலாக ரோல்ஸ் ராய்ஸின் பேண்டம் மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, உலகிலேயே மிக ஆடம்பரமான காராக இது அங்கீகரிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த 92 ஆண்டுகளாக பேண்டம் காரின் 7 வடிவமைப்புகள் அடுத்தடுத்து வந்துள்ளது. அப்போது முதல் இன்று வரை உலகின் மிக ஆடம்பரமான காராக ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close