மே மாத விற்பனையில் 'ஆல்டோ' கார் முதலிடம்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 09:07 am
alto-supreme-tops-in-passengers-vehicle-in-may

மே மாத விற்பனை அடிப்படையில் ஆல்டோ சுப்ரீம் முதலிடம் பிடித்துள்ளது. 

இந்திய மோட்டார் வாகன தாயரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் கடந்த மே மாதத்தில் மாருதி நிறுவனம் 21, 890 ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 23,618ஆக இருந்தது. இதன் படி டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் நீடிக்கிறது. மாருதி செடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தக் கார்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 10 ஆயிரம் அதிகரித்துள்ளது. மாருத்தி பேலினோ 3வது இடத்தில் உள்ளது. 

நான்காவது இடத்தில் மாருதி சுவிப்பட் கார்கள் உள்ளன. இது சென்ற ஆண்டு இதே மாதத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தது. மாருதி வேகன்ஆர், மாருதி விதாரா பிரெஸ்ஸா, ஹுண்டாய் கிரெட்டா, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, மாருதி செலரியோ ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. 

மாருதி சுசுகியின் 7 மாடல்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close