கம்மி விலையில் ஐ-போன் பெற புதிய வழி!

  கனிமொழி   | Last Modified : 19 Aug, 2018 06:02 pm
iphones-and-smartphones-for-rent

ஐ-போன், ஸ்மார்ட் போன்களை வாடகைக்கு கொடுக்க ரெடி ஆகியுள்ளது ரெண்ட்டோமொஜோ நிறுவனம்.

தொழில்நுட்ப கருவிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை பெரும்பாலானவற்றை ஈ.எம்.ஐ முறையில் நாம் வாங்குவது உண்டு. சாம்சங் டிவி, ஆப்பிள் ஐபோன் மற்றும் ஸ்மார்ட் போன்களை சுலப தவணைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவற்றையும் வாடகைக்கு விட தொடங்கியிருக்கிறது ரெண்ட்டோமோஜோ என்ற நிறுவனம்.

முன்னதாக கூகிள் பிக்சல் 2  நிறுவனம் செல்போன்களை  2099 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. இதேபோல் பல எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விட தயாரான ரெண்ட்டோமோஜோ நிறுவனம், தற்போது ஐ போன் எக்ஸ், சாம்சங் எஸ் 9, ஆப்பிள் ஐ போன் 8 போன்ற உயர்தர செல்போன்களை வாடகைக்கு விடுவதற்கு தயாராகி உள்ளது.

அதற்கு முன்பணமாக ரூ.10000 வரை கொடுக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கும் ரெண்ட்டோமோஜோ நிறுவனம் தொடக்கத்தில் ஐபோன்களை மட்டுமே மிக அதிக வாடகைக்கு கொடுப்பதாகவும் மற்ற மொபைல்களை குறைவான வாடகைக்கு கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. ஐபோன் எக்ஸ் மொபைல் போன் சுமார் ரூ.4300-க்கு வாடகைக்கு விடப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close