20 சொகுசு கார்கள் இந்த ஆண்டு அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 02:54 pm
new-arrivals-of-20-suv-cars-in-india

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் சொகுசு கார் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது. 

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை, தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள துடிக்கும் கார் உற்பத்தி நிறுவனங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், 20 புது ரக சொகுசு கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. 

அதன் படி, ஹூண்டாய், கியா மாேட்டார், நிசான், டாடா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள், சாெகுசு கார் உற்பத்தியை துரிதப்படுத்த துவங்கியுள்ளன. இந்த நிறுனவங்களின் தயாரிப்பில், விரைவில், புது ரக சொகுசு கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. 

அதே போல், ஆடி, பி.எம்.டபிள்யூ நிறுவனங்களும், ஏற்கனவே விற்பனை செய்து வரும் சொகுசு கார்களை விட இன்னும் அதிக வசதிகள் உடைய கார்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. 

அதன் படி, குறைந்தபட்சம், 9 லட்சம் ரூபாய் முதல், 12 லட்சம், 15 லட்சம், 60 லட்சம் என, 1.3 கோடி ரூபாய் விலையுடைய கார்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன. 

கார் பிரியர்களுக்கு, குறிப்பாக, சொகுசு கார் பிரியர்களுக்கு, இந்த ஆண்டு பலத்த விருந்து காத்திருப்பதாக, கார் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close