கால் டாக்சி சேவையில், இ - கார்களும் களம் இறங்கியாச்சு!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 04:58 pm
mahindra-glyd-es-into-mumbai-s-app-based-taxi-business-to-rival-uber-ola

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மஹேந்திரா அண்டு மஹேந்திரா, பேட்டரியில் இயங்கும் இ - கார்களை, கால் டாக்சி சேவையில் பயன்படுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளது.

சாேதனை முயற்சியாக, மும்பையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் எனவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போது, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் கால் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. எனினும், இந்த நிறுவனங்களின் மூலம் இயக்கப்படும் கார்கள், பெட்ரோலிய பொருட்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. 

இந்நிலையில், பசுமை திட்டத்தை தீவிர கதியில் அமல்படுத்தும் வகையிலும், மக்கள் மத்தியில், மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பேட்டரியில் இயங்கும் இ - கார்களை தயாரிக்கும் பணியில், மஹேந்திரா அண்டு மஹேந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், இவ்வகை பேட்டரியில் இயங்கும் இ - கார்களை, கால் டாக்சி சேவையில் பயன்படுத்தவும், அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, ‛கிளைட்’ என்ற பெயரில் மும்பையில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான கார்கள் இந்த சேவையில் பயன்படுத்தப்பட்டாலும், கால் டாக்சி சேவையை, வேறு நிறுவனங்களே வழங்க உள்ளன. 

தற்போதைக்கு, மேரு நிறுவனம் இந்த பொறுப்பை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மஹேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துள்ளது. சாதாரண கால் டாக்சிக்களை விட கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும், அவற்றில் இல்லாத பல முக்கிய அம்சங்கள் இந்த கார்களில் இடம் பெற்றுள்ளதாக, மஹேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close