ரூ.149-க்கு தினம் 1 ஜிபி; ஜியோ அதிரடி!

  SRK   | Last Modified : 05 Jan, 2018 09:40 pm


தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் டேட்டா போரை துவக்கி வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு அதிரடி ஆஃபரை வெளியிட்டு மற்ற நிறுவனங்களை கதிகலங்க வைத்துள்ளது. 

சுமார் 350 ரூபாய்க்கு மற்ற நிறுவனங்கள் தினம் 1 ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், 199 ரூபாய் என அதை குறைத்து, வாடிக்கையாளர்களை ஜியோ ஈர்த்தது. தற்போது மேலும் 50 ரூபாயை குறைத்து வெறும் 149 ரூபாய்க்கே தினம் 1 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. இதே சேவை, 70 நாட்களுக்கு ரூ.349, 84 நாட்களுக்கு ரூ.399, 91 நாட்களுக்கு ரூ.449 என வழங்கப்படும்.

ரூபாய் 198க்கு தினம் 1.5 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சேவையை 70 நாட்களுக்கு பெற ரூ.398, 84 நாட்களுக்கு ரூ.448, 91 நாட்களுக்கு ரூ.498 என வழங்கப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close