கூகுள் மீது இந்திய அரசு ரூ.136 கோடி அபராதம்!

  SRK   | Last Modified : 08 Feb, 2018 09:58 pm


சர்வதேச அளவில் மிக பிரபலமான இணைய நிறுவனமான கூகுள் மீது இந்திய போட்டி வளர்ச்சி கமிஷன் 136 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2012ம்  ஆண்டு தனது தேடல் இணையதளத்தில் விதிமீறல் செய்து, ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக கூகுள் செயல்பட்டதாக சில இணைய நிறுவனங்கள் குற்றம் சாட்டின. இது குறித்து விசாரித்து வந்த இந்திய போட்டி வளர்ச்சி கமிஷனின் போர்டு, 4-2 என்ற ரீதியில் கூகுளுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. 

கூகுள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என போர்டில் உள்ள 2 பேர் தெரிவித்தனர். 

இந்திய கமிஷனின் உத்தரவை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக கூகுள் கூறியுள்ளது. 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் கூகுளின் சராசரி வருவாயில் இருந்து 5% தொகையான 136 கோடி ரூபாயை அபராதமாக விதிப்பதாக கமிஷன் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close