ரூ.93-க்கு தினம் 1ஜிபி: ஏர்டெல் மீண்டும் அதிரடி!

  SRK   | Last Modified : 11 Feb, 2018 09:13 pm


ஜியோவின் ஆஃபர்களுடன் போட்டி போட, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி விலை குறைப்புகளில் ஈடுபட்டிருந்தன. 28 நாட்களுக்கு தினம் 1ஜிபி டேட்டா மற்றும் இலவச கால்கள் கொண்ட காம்போ திட்டம், முன்னதாக 349 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது.

ஜியோவின் விலை குறைப்பை தொடர்ந்து, அதை ரூ.199-க்கு ஏர்டெல் வழங்கி வந்தது. 349 ரூபாய் திட்டத்தில் வழங்கி வந்த டேட்டா சமீபத்தில் தினம் 2.5 ஜிபி-யாக உயர்த்தப்பட்டது.

தற்போது ஜியோ ரூ.98-க்கு தினம் 1 ஜிபி என 28 நாட்களுக்கு வழங்கி வருவதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 93 ரூபாய்க்கு தனது திட்டத்தை குறைத்துள்ளது. 

ரூ.93-க்கு இலவச கால்கள், தினம் 1ஜிபி டேட்டா, 100 SMS என 28 நாட்களுக்கு வழங்கும் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால்,  இந்த திட்டம் தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும். 

மற்ற மாநிலங்களில் இந்த திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது 93 ரூபாய்க்கு 10 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் இலவச கால்கள் என்ற குறைந்த திட்டம் அமலில் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close